நாம் அனைவரும் 12 ராசிகளுக்குள்ளும் 27 நட்சத்திரங்களுக்குள்ளும் பிறந்தவர்களாவோம். 12 ராசிகளுக்கும் சூரியன் தொடங்கி சனிவரை ஏழு கிரகங்கள்தான் ஆட்சி கிரகங்களாக உள்ளன. இந்த கிரகங்களின் தன்மை ஒவ்வொரு ராசியினரிடமும் மேலோங்கி இருக்கும். ஜாதகரீதியாக ராசி, நட்சத்திரம், லக்னம், தசாபுத்தி, கிரகங்களின் ஸ்தான நிலை, சஞ்சார நிலைகளை வைத்து ஒவ்வொருவருக்கும் பலன்களில் மாறுபாடு இருக்கும் என்றாலும், ஒவ்வொரு ராசியினருக்கும் அவரவர்களுடைய ராசியாதிபதியைக் கொண்டு பொதுப்பலன்களை அறியமுடியும்.
அந்தவகையில், மேஷ ராசியில் பிறந்தவர்களின் பொதுப்பலன்கள் இவையாகும்.
தைரியத்திற்கும் வீரியத்திற்கும் காரகனான செவ்வாய் பகவானின் ராசியான மேஷத்தில் பிறந்த வர்கள் எந்த நிலையிலும் தைரியம் குறையாதவர்கள். வாழ்க்கையில் நல்லது- கெட்டது இரண்டையுமே சரிசமமாக பாவித்துவரும் இவர் கள் மற்றவர்களுக்காக உழைப்பதி லும், உண்மைக்காகப் போராடு வதிலும் எப்போதும் முதலிடத்தில் இருப்பார்கள்.
கடந்தகாலத்தைப் படிப்பினையாக எண்ணக்கூடியவர்கள். நிகழ் காலத்தைவிட எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைதான் மனதில் மேலோங்கி இருக்கும். அது பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.
இவர்கள் மிகவும் பிடிவாதக் காரர்கள் மட்டுமல்ல; நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்யவேண்டு மென்று நினைக்கக்கூடியவர்கள். இவர்கள்வழியில் யார் குறுக்கிட் டாலும் அவர்கள்மீது ஆவேசம் கொள்வார் கள். எதைப் பற்றியும் கவலைப் படாமல் எல்லாவற்றையும் எதிர்த்துநிற்கும் ஆற்றல் படைத்த வர்கள்.
இவர்கள் ராசிக்கு அதிபதி யான செவ்வாய் க்ஷத்ரிய கிரக மென்பதால் அரசியலில் இவர்களுக்கு தொடர்ந்து உயர்வு கிட்டும். ராஜகிரகமான சூரியன் இவர்கள் ராசியில் உச்சம்பெறுவ தால் பிரகாசமான எதிர்காலம் இவர்களுக்குண்டு. மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு வெளியில் ஒன்றைப் பேசத்தெரியாத இவர் களுக்கு அதுவே பலமும் பலவீனமு மாகும். ரகசியங்களைப் பாது காப்பதில் வல்லவரான இவர் களுக்கு பலதரப்பட்டவர்களின் நட்புகள் கிட்டுவதுடன் அவர் களால் ஆதாயமும் அடைவார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mesham.jpg)
ராசிநாதன் செவ்வாயே பூமிகாரகன் என்பதால், இடத் தாலும் பூமியாலும் எப்போது லாபமுண்டு. ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களும், பில்டர்ஸ்களும் பெரும்பாலும் மேஷ ராசியில் பிறந்த வராகத்தான் இருப்பார்கள். பூமியுடன் சகோதரத்திற்கும், காவல் துறைக்கும், இராணுவத்திற்கும் ஆதிக்கம் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் சிறந்த லட்சியவாதியாகவும் இருப்பார்கள். ஒருசிலர் இவர்களை சுயநலவாதி என்றுகூட விமர்சனம் செய்வார்கள். ஆனால், அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ள மாட்டார்கள்.
எந்தவொரு செயலில் இறங்கினாலும் அதில் வெற்றி பெறவேண்டும் என்பது மட்டுமே இவர்கள் நோக்கமாக இருக்கும்.
அதற்குரிய எல்லா வகையான செயல்களிலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்வார்கள். காரணம், ராசிநாதன் செவ்வாய் செயல் வேகம் மிகுந்தவர் என்பதால் அவருடைய ஆற்றல் இவர்கள் செயல்களில் பிரகாசிக்கும்.
செவ்வாய் அக்கினிக்காரகன் என்பதால் எந்தவொரு காரியத்திலும் துணிச்சலாக இறங்குவார்கள். பக்கத்துணை இல்லாமல் இவர்களே எந்த ஒன்றையும் சாதிக்க நினைப் பார்கள். அதற்குரிய வேகமும் ஆற்றலும் இவர்களிடம் இருக்கும். வெளித்தோற்றத் திற்கு கரடுமுரடானவர்போல் தோன்றினா லும், நெருங்கி வருபவர்களுக்கு உதவி செய்வதே இவர்கள் நோக்கமாக இருக்கும்.
நினைத்ததை, எண்ணுவதை செயலாக் கத் தூண்டும் கிரகம் இவர்கள் ராசிநாதன் செவ்வாய் என்பதால், எதையும் எதிர் பார்த்து, காலம் வரட்டுமென்று காத்திருக்க மாட்டார்கள். நினைத்ததை உடனே சாதித்துவிடவேண்டுமென்று, செயல்படவும் ஆரம்பித்துவிடுவார்கள். தங்கள் செயலுக்கு யார் எதிரில் வந்தாலும் அவரை எப்படி வீழ்த்துவது என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருப்பார்கள்.
எதிரிகளை அழிக்கும் பேராற்றல் பெற்றவர்கள் இந்த ராசியினர் மட்டுமே. மனம் இளகி, "போனால் போகட்டும் பாவம்' என்று இவர்கள் நினைத்து அமைதியானால் மட்டுமே எதிரிகளின் தலை தப்பும். அந்த அளவுக்கு ஆற்றல் மிக்கவர்கள்.
மனித உடம்பில் தலைக்கும், முகத்திற் கும் மேஷ ராசியே காரகமாகிறது என்பதால், இவர்களுக்கு சுய அறிவும், சொந்த மூளை யும், முகத்தைக் கவர்ச்சியாக வைத்துக் கொள்ளும் திறமையும் அதிகம் இருக்கும். இவர்களால் புதிய புதிய சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளமுடியும். அதன்மூலம் புதியனவற்றைத் தோற்றுவிக்கவும் முடியும் என்றாலும், சில நேரத்தில் ஆத்திரத்தாலும், படபடப்பாலும், உணர்ச்சி வேகத்தாலும் தங்கள் முயற்சிக்குரிய வெற்றிகளை எட்ட முடியாமல் போய்விடும். எனவே எந்த வொரு முயற்சியிலும் திட்டமிட்டு ஈடுபட் டால் மட்டுமே வெற்றியைக் காணமுடியும்.
பொதுவாகவே எந்தவொரு செயலிலும் மேம்போக்காக ஈடுபடமாட்டார்கள். அதன் கடைசிவரையில் சென்று தங்கள் முத்திரையைப் பதிப்பார்கள். சவாலான விஷயங்களையும் சாதாரணமாக ஏற்று முடித்துக்காட்டும் வல்லமை பெற்றவர்கள். இவர்கள் வாழ்க்கை முழுவதும் இனிய நினைவுகளும், இளமைத் துடிப்பும், மற்றவர்களை ஈர்க்கும் தோற்றமும் இருக்கும். தங்கள் சுய ஆற்றலாலோ, சாதுர்யத் தாலோ, தனித்தன்மையாலோ தங்கள் வாழ்நாள்வரை எல்லாரையும் வழிநடத்தும் திறன் இவர்களிடம் இருக்கும். பலர் இருக்கும் இடத்தில் இவர்களே முதன்மையாளராக இருக்கவும் செய்வார்கள்.
எல்லாருக்கும் ஆதரவுகாட்டி முன் னேற்றிவிட நினைக்கும் இவர்களை சிலரால் புரிந்துகொள்ள முடியாது. இவர்களை ஒருவர் நம்பிவிட்டால் இவர்களைக் கொண்டே எல்லா காரியங்களையும் அவர் களால் வெற்றிகொள்ளமுடியும். இவர் களுக்கு எப்போதும் முன்கோபம் அதிகம் என்பதால் பின்விளைவுகள் பற்றியெல்லாம் கவலைப்படாமல், எப்படிப்பட்டவரையும் எதிர்க்க ஆரம்பித்துவிடுவார்கள். இதனால் இவர்களுக்கு நட்பு வட்டமென்பது குறுகிய தாகவே இருக்கும்.
இவர்கள் வாழ்வில் ஏதாவதொரு லட்சியம் இருக்கும். அதை அடை வதற்கான வாய்ப்பையும் இயல்பாகவே பெற்றிருப்பார்கள். ஈடுபடும் செயல்கள் ஒவ்வொன்றிலும் உடனே வெற்றியைப் பார்த்துவிட வேண்டுமென்று நினைப்பார்கள். அதில் வெற்றியடைய முடியாத நிலையில், அதை அப்படியே விட்டுவிட்டு வேறு முயற்சியில் ஈடுபட ஆரம்பித்துவிடுவார்கள். இதற்குக் காரணம் இவர்களிடமுள்ள அவசரத் தன்மையே ஆகும். எந்தவொரு செயலையும் யோசித்து நிதானித்து செய்யும்போது நிச்சயமாக அதில் இவர்களால் வெற்றியைக் காணமுடியும்.
இளம்வயதில் காதல் உணர்வு நிரம்பிய வர்களாக இருப்பார்கள். காதலைப்பற்றி இவர்கள் கட்டும் கற்பனைக் கோட்டைகள் திருமணத்திற்கு ஏற்றதாக இருக்காது. எல்லா வற்றிலும் அவசரத்தனத்துடன் செயல்படும் இவர்கள், திருமண விஷயத்தில் மட்டும் அது போல் செயல்படக்கூடாது. வாழ்க்கைத் துணை என்பது வாழ்க்கை முழுவதும் நிலைத்து இன்பத்திலும் துன்பத்திலும் பங்கேற்றிடக் கூடியது என்பதால், உணர்ச்சி வேகத்தாலோ, உடல் தேவைகளாலோ, சந்தர்ப்ப சூழ்நிலை களாலோ அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வராமல், ஆழ்ந்து யோசித்தே எந்தவொரு முடிவுக்கும் வரவேண்டும். இல்லையெனில் திருமண வாழ்க்கை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கிவிடும். எனவே உணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் அறிவுக்கு இடம்கொடுத்தால் மட்டுமே மண வாழ்க்கை மணக்கும்.
பொதுவாக இவர்களோடு சேர்ந்து வாழ்வதென்பது மிகவும் கடினம். சட்டென்று உணர்ச்சிவசப்படுதல், அதிகமாக எதிர்பார்த்தல், தான் விரும்பும் ஒன்றை வற்புறுத்தி அதிகமாக அடையமுயலுதல் என்ற போக்குக்கொண்ட இவர்களைத் திருப்திப் படுத்த முடிந்தவர்களால் மட்டுமே சந்தோஷ மாகவும் நிலையாகவும் குடும்பம் நடத்த முடியும்.
பொதுவாக குடும்ப வாழ்க்கையைப் பெரிதும் விரும்பும் இவர்கள், தங்கள் வீட்டில் வசதிகளும் மகிழ்ச்சியும் அதிகரிக்கவேண்டும் என்பதற்காக அதிகம் உழைப்பார்கள் என்றா லும், யாராலும் இவர்களைக் கட்டிப்போட்டு வைக்கமுடியாது. இவர்களுக்குப் பிடித்த மில்லாத எந்தவொரு பொறுப்பையும் இவர்கள்மீது யாராலும் திணிக்கமுடியாது.
இவர்களில் பெரும்பாலோர் உஷ்ண மான உடல் வாய்ந்தவர்களாகவே இருப்பார் கள். காய்ச்சல், ஜுரம், தலைவலி, சோர்வு என்று அடிக்கடி தோன்றலாம். சிலருக்கு தூக்கமில்லா நிலையும் இருக்கும். எந்த வேலையாக இருந்தாலும் அதில் முழு மூச்சுடன் செயல்படும் இவர்களுக்கு நரம்புத்தளர்ச்சியும், ரத்த சோகையும் ஏற்படும். அதனால் பிற்காலத்தில் மூட்டுவீக்கம், வாதம் என்று பாதிக்கப்படுவார்கள். எனவே வீண் டென்ஷனைக் குறைத்து வாழவேண்டும்.
பொதுவாக மேஷ ராசியினர் குழந்தைச் செல்வத்திற்குக் குறைவில்லாதவர்கள் என்றா லும், குழந்தைகளுக்கும் இவர்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகிவிடும். எந்த ஒன்றையும் கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் பெற்ற இவர்களுக்கு தங்கள் தகுதியின்மூலம் கிடைக்கும் வருமானத்தைவிட திறமையின் மூலம் கிடைக்கும் வருமானமே அதிகமாக இருக்கும். ஒரு துறையில் தகுதிகொண்டு ஒருவர் சாதிக்கும் சாதனைகளைவிட அது பற்றித் தெரிந்துகொண்டு இவர்கள் சாதிப்பது நூறுமடங்காக இருக்கும்.
மேஷ ராசியில் பிறந்தவர்களாக இருந்தாலும், ஒவ்வொருவரின் ஜாதகமும் வேறுபட்டிருக்கும். நட்சத்திரம் வேறுபட்டிருக்கும். தசாபுக்தி மாறுபட்டிருக்கும். ஒருவருடைய ஜாதகத்தில் அமைந்திருப்பதுபோல் அடுத்தவர் ஜாதகத் தில் கிரகங்கள் அமைந்திருக்காது. ஒருவருக்கு நட்பாக, ஆட்சியாக, உச்சமாக அமைந்திருக்கும் கிரங்கள் அடுத்தவருக்கு நீசமாகவும் பகையாகவும் அமைந்திருக்கலாம். அதனால் பலன்களும் மாறுபடலாம்.
அடுத்த இதழில் ரிஷபம்...
செல்: 99406 86060
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-03/mehsam-t.jpg)